கரூர் பலிக்கு 5 காரணங்கள்? பிரேமலதா விளக்கம்

கரூர் பலிக்கு தவெக பக்கமும் தவறு இருக்கிறது, தமிழக அரசு பக்கமும் கவனக் குறைவு இருக்கிறது என்று தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
premalatha
பிரேமலதா (கோப்புப்படம்)DIN
Published on
Updated on
1 min read

கரூர் பலிக்கு தவெக பக்கமும் தவறு இருக்கிறது, தமிழக அரசு பக்கமும் கவனக் குறைவு இருக்கிறது என்று தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்த பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு முழுக்க அரசியல் பொதுக்கூட்டங்கள், மாநாடு நடைபெறுகின்றன. ஆனால் இதுவரைக்கும் தமிழக அரசியல் வரலாற்றில் அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இப்படி ஒரு உயிர்ச்சேதம் எங்கும் நடைபெறவில்லை. இது மிகவும் வருந்தத்தக்கது. பாதிக்கப்பட்ட அத்தனை குடும்பங்களையும் நேரில் சந்தித்தேன்.

அனைவரும் கூறுவது அங்கு குறுகலான பாதை, உரிய பாதுகாப்பு யாருக்கும் தரப்படவில்லை. விஜய் வாகனம் கூட்டத்தை நெருங்கி வரவர கூட்ட நெரிசல் அதிகமாகி உள்ளது. அந்த இடத்தில் போலீஸ் லேசான தடியடி நடத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு நிறையபேர் கீழே விழுந்ததால் உயிர்பலி ஏற்பட்டிருக்கிறது. ஆம்புலன்ஸ்கள் வரிசையாக வருகின்றன. விஜய்யே சொல்கிறார், 'என்ன, நம் கட்சி கொடியோட ஆம்புலன்ஸ் வருகிறதே' என்று.

அந்த ஆம்புலன்ஸ்கள் யாருடையது? இதுக்கெல்லாம் அரசு மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். இதற்கு யார் பொறுப்பேற்பது?. குறுகலான பாதையில் அரசு அனுமதி தரலாமா. பெரிய மைதானத்தைத்தான் கொடுத்திருக்க வேண்டும். சிகிச்சை பெறுபவர்களிடம் கேட்டதற்கு, காலதாமதம், குறுகலான பாதை, கரூர் பவர் கட், போலீஸ் தடியடி, தவெக கொடியுடன் ஆம்புலன்ஸ் ஆகிய காரணங்களால்தான் உயிர் பலி ஏற்பட்டிருக்கிறது. தவெகவும் இதை உணர வேண்டும்.

கரூர் பலி: காங்கிரஸ் ரூ. 1 கோடி நிவாரணம் அறிவிப்பு!

விஜய்க்கு எந்தவாறு பாதுகாப்பு இருக்கிறதோ அதேபோல் தொண்டர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். போலீஸ் ஆளுங்கட்சிக்கு மட்டுதான் நிற்பார்கள். எதிர்க்கட்சிக்கு ஆதரவு தரமாட்டார்கள். எல்லாம் நடந்த பிறகுதான் போலீஸ் வருகிறார்கள். அதுவரை போலீஸார் என்ன செய்தார்கள். அதன்பிறகு அமைச்சர்கள் எல்லாம் வருகிறார்கள். விஜய் பேசுகிற 10 நிமிடத்துக்கு முன்கூட்டியே பாதுகாப்பு கொடுத்திருக்கலாம்.

ஆனால் அப்படி எந்த ஏற்பாடும் செய்யவில்லை. எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இதுபோன்று தமிழகத்தில் நடக்கக்கூடாது. தவெக பக்கமும் தவறு இருக்கிறது, தமிழக அரசு பக்கமும் கவனக் குறைவு இருக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Summary

DMDK General Secretary Premalatha Vijayakanth has said that there is fault on both sides in the Karur stampede.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com