
ஆயுத பூஜையையொட்டி சென்னை எழும்பூர்- திருவனந்தபுரம் இடையே நாளை(செப். 30) சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் எண் 06075 சென்னை எழும்பூரில் இருந்து நாளை(செப். 30) இரவு 10.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள்(அக். 1) பிற்பகல் 2.05க்கு திருவனந்தபுரத்தை அடையும்.
இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், பாலக்காடு, திருச்சூர், கோட்டயம், கொல்லம் வழியாகச் செல்லும்.
அதேபோல திருவனந்தபுரத்தில் இருந்து அக். 5 மாலை4.30 மணிக்குப் புறப்படும் ரயில்(06076) மறுநாள் அக். 6 காலை 10.30 மணிக்கு சென்னையை வந்தடையும்.
தாம்பரம் - செங்கோட்டை சிறப்பு ரயில்
சென்னை தாம்பரம் - செங்கோட்டை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்(06013) தாம்பரத்தில் இருந்து நாளை(செப். 30) மாலை 4.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள்(அக். 1) அதிகாலை 3 மணிக்கு செங்கோட்டையைச் சென்றடையும்
தாம்பரம், செங்கல்பட்டு, விருத்தாச்சலம், அரியலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி வழியாகச் செல்லும்.
அதேநேரத்தில் செங்கோட்டையில் இருந்து தம்பரத்துக்கு ரயில் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பின்னர் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | கரூர் பலி: நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன! - ப.சிதம்பரம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.