
ஆயுத பூஜையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 2 சிறப்பு முன்பதிவில்லாத ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எழும்பூர் - மதுரை சிறப்பு ரயில்
சென்னை எழும்பூர் - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்(06161) தாம்பரத்தில் இருந்து நாளை(செப். 30) இரவு 11.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள்(அக். 1) காலை 10.15 மணிக்கு செங்கோட்டையைச் சென்றடையும்
தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல் வழியாகச் செல்லும்.
தாம்பரம் - செங்கோட்டை சிறப்பு ரயில்
சென்னை தாம்பரம் - செங்கோட்டை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்(06013) தாம்பரத்தில் இருந்து நாளை(செப். 30) மாலை 4.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள்(அக். 1) அதிகாலை 3 மணிக்கு செங்கோட்டையைச் சென்றடையும்
தாம்பரம், செங்கல்பட்டு, விருத்தாச்சலம், அரியலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி வழியாகச் செல்லும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.