கரூர் பலி: தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது

கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பான வழக்கில் தவெகவின் அம்மாவட்ட செயலாளர் மதியழகன் கைது
கரூர் பலி: தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது
-
Published on
Updated on
1 min read

கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பான வழக்கில் தவெகவின் அம்மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார்.

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெகவின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகனை காவல்துறையினர் கைது செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். மேலும், காயமடைந்த பலரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதையும் படிக்க: அழுவது போல் நடித்தவரா, அழுகையைப் பற்றிப் பேசுவது? இபிஎஸ்-க்கு அமைச்சர் அன்பில் மகேஸ் கேள்வி

Summary

Karur Stampede: TVK'sKarur West District Secretary Mathiyazhagan arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com