

கோவையில் இருந்து கரூர் சென்றுகொண்டிருந்த பாஜக எம்பிக்களின் கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார்கள் லேசான சேதமடைந்த நிலையில், எம்பிக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியான நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க எம்.பி. ஹேமமாலினி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி குழு அமைத்தது.
ஹேமமாலினி தலைமையில் அமைக்கப்பட்ட இந்த எம்.பி.க்கள் குழுவில் அனுராக் தாகூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால் உள்பட 8 மூத்த எம்பிக்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர், சம்பவம் நடந்த இடத்தை ஆய்வுசெய்து, பாதிக்கப்பட்டோரைச் சந்திப்பதற்காக கோவை விமான நிலையத்துக்கு இன்று காலை வந்தடைந்தனர். கோவையில் இருந்து சாலை வழியாக கரூருக்கு கார்களில் புறப்பட்டனர்.
இந்த நிலையில், கோவை மாவட்டம் சூலூர் அருகேவுள்ள சின்னியம்பாளையம் பகுதியில் ஹேமமாலினி காரும், பாஜக எம்பிக்கள் பயணித்த மற்றொரு காரும் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் எம்பிக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கார்களுக்கு மட்டுமே லேசான சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சிறிது நேரத்தில் அதே கார்களில் கரூர் நோக்கி எம்பிக்கள் புறப்பட்டுச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.