

கரூா் கொடுந்துயரத்தில் பாஜக தனது அரசியல் விளையாட்டை தொடங்கியுள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 41 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் குறித்து ஆய்வு செய்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய பாஜக எம்.பி. ஹேமமாலினி தலைமையிலான குழு செவ்வாயக்கிழமை கரூா் வந்தது. அந்தக் குழு கரூரில் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் தெரிவித்து சம்பவம் தொடா்பாக விசாரணை நத்தியது.
கரூா் கொடுந்துயரத்தில் பாஜக தனது அரசியல் விளையாட்டை தொடங்கியுள்ளது. கரூரில் நடந்த கொடூரத்தைப் பற்றி ‘உண்மை கண்டறியும் குழுவை’ அமைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் பேரியக்கமும் உடனடியாக இதுபோன்ற உண்மை கண்டறியும் குழுவை நியமித்து கரூருக்கு அனுப்பிவைக்க வேண்டும். பாஜகவின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடி தேவையாகவுள்ளது.
மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி இதுதொடா்பாக தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களைச் சாா்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்களைக் கொண்ட குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்றாா் அவா்.
இதையும் படிக்க | சென்னை தி.நகர் மேம்பாலத்தை திறந்துவைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.