சென்னை தி.நகர் மேம்பாலத்தை திறந்துவைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

சென்னை தி.நகர் மேம்பாலம் திறக்கப்பட்டது பற்றி...
Tamilnadu CM M.K. Stalin inaugurated T nagar flyover in chennai
தி.நகர் மேம்பாலத்தை திறந்துவைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்DIPR
Updated on
1 min read

சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையில் ரூ.165 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரும்பு மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(செவ்வாய்க்கிழமை) திறந்து வைத்தார்.

உஸ்மான் சாலை - சிஐடி நகரை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலத்திற்கு மறைந்த திமுக முன்னாள் எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலத்தில் நாளொன்றுக்கு சுமார் 40,000 வாகனங்கள் செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு இதன் பணிகள் துவங்கப்பட்ட நிலையில் 1.2 கி.மீ. நீளத்தில் 53 தூண்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, எம்.பி. ஆ. ராசா, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Summary

Tamilnadu CM M.K. Stalin inaugurated T nagar flyover in chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com