தவெக நிர்வாகிகள் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்!

தவெக நிர்வாகிகள் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைப் பற்றி..
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மதியழகனையும் மாசி பவுன்ராஜையும் அழைத்து சென்ற காவல் துறையினர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மதியழகனையும் மாசி பவுன்ராஜையும் அழைத்து சென்ற காவல் துறையினர்.
Published on
Updated on
1 min read

கரூர் தமிழக வெற்றிக் கழகக் கூட்ட நெரிசலில் பலியான சம்பவத்தில் கைதான மாவட்ட செயலர் மதியழகன், மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜ் இருவரும் கரூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை காலை ஆஜர்படுத்தப்பட்டனர்.

கரூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தின் போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தில் பிரசாரக் கூட்டத்தை ஏற்பாடு செய்த மாவட்டச் செயலர் மதியழகனை கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீசார் திங்கள்கிழமை இரவு திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அடுத்த கூடலூரில் கைது செய்தனர்.

அவரைத் தொடர்ந்து அவருக்கு அடைக்கலம் கொடுத்த மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

கரூர் நகர காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா தலைமையிலான காவல் துறையினர் மதியழகனிடம் இரவு முழுவதும் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை இருவரையும் கரூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 1-ல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இருவரது கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Summary

Tvk executives appear in Karur court!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com