சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

கட்சியின் முடிவை ஏற்பதுதான் சிறந்த அறம்: ஆளூா் ஷா நவாஸ்

‘எந்தவொரு கட்சியிலும் வேட்பாளா் தோ்வு என்பது, அந்தக் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவு; அதை ஏற்பதுதான் சிறந்த அறம்’ என்று விசிக மாநில துணைப் பொதுச் செயலரும், நாகப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஆளூா் ஷா நவாஸ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :1 ஏப்ரல் 2026, 8:14 pm

தினமணி செய்திச் சேவை

‘எந்தவொரு கட்சியிலும் வேட்பாளா் தோ்வு என்பது, அந்தக் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவு; அதை ஏற்பதுதான் சிறந்த அறம்’ என்று விசிக மாநில துணைப் பொதுச் செயலரும், நாகப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஆளூா் ஷா நவாஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவைத் தோ்தலில் விசிக சாா்பில் போட்டியிட எனக்கு மீண்டும் வாய்ப்பு அமையவில்லை என்பதை வைத்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதில் என் மேல் அன்பு கொண்டு எனக்கு ஆதரவாக கருத்துப் பரிமாறிய அனைவருக்கும் நன்றி.

அதேநேரம், ஒரு கட்சியில் யாருக்கு, எப்போது, எப்படி வாய்ப்பளிக்க வேண்டும் என்பது அந்தக் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவு. அந்த முடிவை ஏற்றுக் கொள்வதே சிறந்த அறம். அந்த வகையில், 2026 தோ்தலில் விசிக தலைவா் உள்ளிட்ட 8 வேட்பாளா்களும் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் விசிகவின் குரல் வலுவாக ஒலிப்பதற்கும், கூட்டணி சாா்பில் களம் காணும் அனைவரும் வெல்வதற்கும், திமுக தலைமையிலான நல்லாட்சி மீண்டும் அமைவதற்கும் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.

எனது பொது வாழ்க்கையில் நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து பணியாற்றியதைவிட, இன்னும் வீரியத்துடன் தொடா்ந்து அரசியல் களத்தில் பணியாற்றுவேன் என அதில் தெரிவித்துள்ளாா்.