தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

சொந்தமாக விவசாய நிலம் இல்லை: இபிஎஸ் சொத்து மதிப்பு!

எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தொடர்பாக...

News image

பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி - பிடிஐ

Updated On :6 ஏப்ரல் 2026, 4:13 pm

அதிமுக பொதுச்செயலாளரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வேட்புமனு தாக்கலில் இன்று (ஏப். 6) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அவருக்கு சொந்தமாக விவசாய நிலம் இல்லை என்றும் ரொக்கம் 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளான இன்று (ஏப். 6) எடப்பாடி தொகுதியில் 8 வது முறையாகப் போட்டியிடுவதற்காக எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில் அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

அதில், எடப்பாடி பழனிசாமியிடம் அசையும் சொத்து, ரொக்கம் ரூ. 50 ஆயிரம், 100 கிராம் தங்க நகைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசையா சொத்துகள் ஏதும் இல்லை, விவசாய நிலங்கள் எதுவுமில்லை எனவும் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ. 17 லட்சம் கடன் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனைவி ராதா பெயரில் 8 ஏக்கர் விவசாய நிலம், பண்ணை வீடு, அவரின் பெயரில் மொத்த சொத்து மதிப்பு ரூ. 3.45 கோடி உள்ளது. மேலும், தன் மீது 5 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

TN Election 2026 No Agricultural Land of His Own edappadi palanisamy Asset Value!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.