ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

முன்னோடித் திட்டங்களில் திமுகதான் ‘ஓஜி!' - முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்

“உங்கள் அண்ணன் ஸ்டாலின் தரும் சீர்!” - புதுகையில் முதல்வா் பிரசாரம்

News image

புதுகையில் முதல்வா் பிரசாரம் - @mkstalin

Updated On :11 ஏப்ரல் 2026, 7:56 pm IST

புதுக்கோட்டை : மக்களுக்கான முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் திமுகதான் ‘ஓஜி (ஒரிஜினல்)' என்று புதுகை பிரசாரத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசினார்.

மு.க. ஸ்டாலின் தஞ்சையில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தை முடித்துக் கொண்டு புதுக்கோட்டை வந்தாா். சனிக்கிழமை காலை புதுக்கோட்டை மாவட்டத்தில் சில பகுதிகளில் நடைபயிற்சி மேற்கொண்டவாறே மக்களைச் சந்தித்துப் பேசினார்.

அதைத் தொடர்ந்து, சனிக்கிழமை (ஏப். 11) மாலை திமுக கூட்டணி வேட்பாளா்களுக்கான பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது :

“கிரிக்கெட்டில் பல வீரர்கள் பல சாதனைகளைச் சொந்தமாக்கி வைத்திருப்பார்கள். ஆனால், சச்சின் டெண்டுல்கரைப் பார்த்தீர்களென்றால், அவரிடம் எல்லா சாதனைகளும் இருக்கும்.

அரசியலில் அப்படிப்பட்ட, முறியடிக்க முடியாத எல்லா சாதனைகளையும் நம் திமுகதான் செய்திருக்கிறது என்பதைப் பெருமையுடன் சொல்கிறேன். இனியும் தொடர்ந்து நாம்தான் சாதனை முறியடிப்பையும் பண்ணப் போகிறோம்.

நம்ம திட்டங்களைப் பார்த்துதான், இன்றைக்கு பல்வேறு மாநிலங்கள் காப்பியடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன்? மத்திய அரசே காப்பியடித்துக் கொண்டிருக்கிறது.

மக்களுக்கான முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் திமுகதான் ‘ஓஜி (ஒரிஜினல்)'. இந்த ஸ்டாலினுடைய அப்படிப்பட்ட திட்டங்களைச் சொல்லட்டா?

இங்கு இருக்கக்கூடிய சகோதரிகளிடம் கேட்கிறேன்... மாதந்தோறும் 15-ஆம் தேதி உங்கள் வங்கிக்கணக்குக்கு இந்த அண்ணன் கொடுக்கிற ரூ. 1,000 உதவித்தொகை வருகிறதா?

திராவிட மாடல் 2-இல், எவ்வளவு உரிமைத் தொகை உயர்த்தப் போகிறோம்? இரட்டிப்பாக்கப் போகிறோம்! ரூ. 2,000-மாக்க போகிறோம்.

இல்லத்தரசிகள் தங்கள் அன்றாடச் செலவுக்குக்கூட பிறரைச் சார்ந்திருக்கக்கூடிய சூழல் இருந்தது. அதை உரிமைத் தொகையால் உடைத்திருக்கிறோம். எங்கள் அண்ணன் ஸ்டாலின் தர சீர் என மகளிர் எல்லோரும் உரிமையுடன் பேசுகிறார்கள்.

அடுத்து விடியல் பயணம்; பெண்களுடைய பொருளாதாரச் சுதந்திரத்துக்கு அடிப்படையாக அமைந்திருக்கக்கூடிய புதிய புரட்சித் திட்டம் அது. வீட்டுக்குள்ளேயே பலர் முடங்கியிருக்கிற நிலையை உடைத்திருக்கிறோம்” என்றார். அதன் தொடர்ச்சியாக, தங்களது ஆட்சியில் கொண்டு வந்துள்ள திட்டங்களைப் பற்றி பேசி அங்கு திரண்டிருந்த மக்களிடம் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து வாக்கு சேகரித்து அவர் பிரசாரத்தை முடித்தார்.

Summary

TN Election 2026 CM Stalin in Pudukkottai rally

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.