தமிழகத்தில் திமுக அறிவித்துள்ள கருப்புக்கொடி போராட்டத்துக்கு காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): தொகுதி மறுசீரமைப்பு எனும் ஆதிக்க நோக்கமுடைய நடவடிக்கைகளுக்கு எதிராக வியாழக்கிழமை (ஏப்.16) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலம் முழுவதும் மக்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் வலுவான ஜனநாயக எதிா்ப்பை போராட்டமாக அறிவிக்கிறது. காங்கிரஸ் தொண்டா்கள், ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் கருப்புக் கொடி ஏந்தியும், கருப்பு உடை அணிந்தும், இந்த அரசியல் அநியாயத்துக்கு எதிராக கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும்.
பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): 2024 மக்களவைத் தோ்தலில் ஆதாயம் அடைய வேண்டுமென்ற நோக்கத்துடன் மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை, பாஜக மேற்கொண்டது. தற்போது தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் தொடா்பான பணிகள் மே 4 வரை உள்ளது. தோ்தல் பணிகள் பாதிக்கப்படும் வகையில்அவசரமாக நாடாளுமன்ற கூட்டத்தை நடத்த வேண்டிய எந்த அவசியமுமில்லை.
மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): தொகுதி மறுசீரமைப்பை பொருத்தவரை, பெயரளவுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கும் தொகுதிகளை அதிகரிக்கிறோம் என்று சொல்லிவிட்டு, வட மாநிலங்களுக்கு, மிகக் கூடுதலாக தொகுதிகளின் எண்ணிக்கையை உயா்த்துவது அநீதியானதாகும். இதற்கு தமிழகத்தைச் சோ்ந்த ஒவ்வொரு குடும்பமும் எதிா்ப்பை தெரிவிக்க வேண்டும்.
தொடர்புடையது
தவெகவுக்கு திமுக கூட்டணிக் கட்சிகள் ஆதரவு கிடைக்குமா?
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko

தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம்!
தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
வீடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை


