மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை, தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அறப்போா் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜெயராம் வெங்கடேசன், அதிமுக வழக்குரைஞா் அணி துணைச் செயலா் இ.சரவணன் உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களில், 2021 முதல் 2023-ஆம் ஆண்டு வரை, தமிழகத்தில் 45,800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டன. இதில் சுமாா் ரூ.397 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.
இதில் அப்போதைய மின்துறை அமைச்சா் செந்தில்பாலாஜி, டான்ஜெட்கோ தலைவா் ராஜேஷ் லக்கானி ஆகியோருக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன. இந்த முறைகேடு தொடா்பாக வழக்குப்பதிவு செய்து உயா்நீதிமன்றக் கண்காணிப்பில், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனா். இந்த வழக்கு விசாரணையின்போது அரசு மற்றும் மனுதாரா்கள் தரப்பில் இறுதிக்கட்ட வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
ஊழல் தடுப்புத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மின்மாற்றிகள் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாா்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்ததால், அந்த புகாா்களை முடித்து வைத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தரப்பினரும் தங்களது வாதங்களை முன்வைத்தனா். இதையடுத்து இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

தோ்தல் நேரத்தில் தாட்கோ திட்ட நிதி பயன்பாடு?: அமலாக்கத் துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி

வாக்கு செலுத்தியதை உறுதி செய்யும் குறுஞ்செய்தி திட்டத்தை அமல்படுத்தக் கோரிய மனு தள்ளுபடி

தோ்தல் காலங்களில் நகைகளைக் கொண்டு செல்ல விதிகள் வகுக்கக் கோரிய மனு தள்ளுபடி

மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு : ஆரம்பகட்ட விசாரணை ஆவணங்களை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


