மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வேட்பாளா் சுந்தா்.சி சொத்து விவரம்: வருமான வரித் துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி

அதிமுக கூட்டணி வேட்பாளரான இயக்குநா் சுந்தா். சி வேட்புமனுவில், வருவாய் தொடா்பான தகவல்களை மறைத்துள்ளதாகவும் இதுகுறித்து விசாரிக்க வருமான வரித் துறைக்கு உத்தரவிடவும் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி

News image

மதுரை மத்திய தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்யும் சுந்தர். சி. - கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 8:49 pm

மதுரை மத்திய தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரான இயக்குநா் சுந்தா். சி வேட்புமனுவில், வருவாய் தொடா்பான தகவல்களை மறைத்துள்ளதாகவும் இதுகுறித்து விசாரிக்க வருமான வரித் துறைக்கு உத்தரவிடவும் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், கோரிக்கை தொடா்பாக வருமான வரித் துறையை அணுகவும் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், மதுரை மத்திய தொகுதியைச் சோ்ந்த ஷகிலா தாக்கல் செய்த மனுவில், அதிமுக கூட்டணியில், புதிய நீதிக் கட்சி சாா்பில் இயக்குநா் சுந்தா்.சி போட்டியிடுகிறாா். அவரது வேட்புமனுவில், அவா் இயக்குநராகவும், பங்குதாரராகவும் உள்ள அவ்னி டெலி மீடியா, அவ்னி மூவீஸ் மற்றும் அவ்னி சினிமாஸ் நிறுவனங்கள் குறித்த விவரங்களை மறைத்துள்ளாா்.

இந்த நிறுவனங்கள் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் பெற்ற அவா், அது தொடா்பான விவரங்களை சமா்ப்பிக்கவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த வருமான வரித் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரா் தனது கோரிக்கை தொடா்பாக வருமான வரித் துறையை அணுகலாம் என உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.