முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

தமிழகம் வரும் ராகுல்! 3 மாவட்டங்களில் இன்று பிரசாரம்!

தமிழகத்தில் ராகுல் காந்தி இன்று பிரசாரம் மேற்கொள்ளவுள்ளது தொடர்பாக...

LoP Rahul gandhi speech in ponneri thiruvallur district

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி - x/ congress

Published On :

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று(ஏப்.20) பிரசாரம் மேற்கொள்கிறார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி இன்று பிரசாரம் செய்கிறார்.

கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலுக்கு வருகிறார். அங்கு பகல் 11.30 மணிக்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.

பின்னர் நான்குனேரிக்கு பகல் 1 மணிக்கு சென்றடைகிறார். அங்கு சுங்கச்சாவடி அருகே நடைபெறும் பிரசார மேடையில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி ஆர். மனோகரனை ஆதரித்து பேசுகிறார்.

அதைத் தொடர்ந்து, பிற்பகல் 2.15 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குள்பட்ட சாயர்புரத்திலும் பிரசாரம் மேற்கொள்கிறார். பின்னா், இரவு 8 மணி அளவில் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் தில்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.

தேர்தல் பிரசாரம் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Summary

Congress senior leader and Leader of the Opposition in the Lok Sabha, Rahul Gandhi, is campaigning in three districts of Tamil Nadu today (April 20).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.