மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

பொன்னேரியில் மு.க. ஸ்டாலின் பெயரைக் குறிப்பிடாத ராகுல்! பெரியார் பற்றிப் புகழாரம்!

பொன்னேரியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றது பற்றி..

Rahul Gandhi Speaks About Periyar, but Did Not Mention M.K. Stalin Name

ராகுல் காந்தி - congress

Published On :

பெரியாரின் கொள்கைகளை பாஜகவினர் அழிக்க நினைக்கிறார்கள் என பொன்னேரியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் பிரசாரம் செய்யும்பொருட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று(ஏப். 18) சென்னை வந்துள்ளார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை தமிழ்நாடு வராத மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், இன்று(ஏப். 18) தமிழகத்தில் 3 இடங்கள் பிரசாரம் செய்து வருகிறார்.

இன்று காலை திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசினார்.

அவர் பேசும்போது 'இந்தியா கூட்டணி வேட்பாளர்கள்' என்றே பேசிய நிலையில் 20 நிமிட உரையின் இறுதியில், 'திமுக, காங்கிரஸ், பிற கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணிக்கு ஆதரவளியுங்கள்' என்று கூறினார்.

ஆனால், திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் பெயரை ஓரிடத்தில்கூட குறிப்பிடவில்லை.

ஏற்கெனவே திமுக கூட்டணி, தமிழக காங்கிரஸ் மீது ராகுல் காந்தி அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதேபோல இன்றைய கூட்டத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ்ஸை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி, பெரியார் பற்றி பேசியுள்ளார்.

"அதிமுகவினர் மோடி, அமித் ஷாவிடம் சரணடைந்துவிட்டார்கள். ஆர்எஸ்எஸ், பாஜக தாக்குதல்களை நிறுத்த வேண்டும்.

பெரியாரின் கொள்கைகளை பாஜகவினர் அழிக்க நினைக்கிறார்கள். பெரியாரின் தத்துவங்களை நசுக்கப் பார்க்கிறார்கள், அவருடைய சமூக நீதிக் கொள்கைகளை அழிக்க பார்க்கிறார்கள். நான் எங்கு இருந்தாலும் தமிழ் மக்களுடன் இருப்பேன். தமிழ் மொழி, கலாசாரத்தைப் பாதுகாப்பதில் ராகுல் காந்தி என்றும் உடனிருப்பேன்" என்று கூறினார்.

Summary

Rahul Gandhi Speaks About Periyar, but Did Not Mention M.K. Stalin Name

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.