இந்திய பங்குச்சந்தைகள் இன்று(ஜூன் 3) கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 74,507.73 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 801.42 புள்ளிகள் குறைந்து 73,848.42 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 224.20 புள்ளிகள் குறைந்து 23,259.35 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
சென்செக்ஸ் 30 பங்குகளில் அதானி போர்ட்ஸ், பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் மட்டும் உயர்ந்தும் இதர நிறுவனங்கள் சரிந்தும் வர்த்தகமாகி வருகின்றன.
நிஃப்டி 50 பங்குகளில் டிசிஎஸ், ஹெச்சிஎல், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன.
நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.67 சதவீதம், 0.48 சதவீதம் சரிவுடன் வர்த்தகமாகின்றன.
துறை வாரியாக, நிஃப்டி ஐடி குறியீடு 4% -க்கும் அதிகமாக சரிவைச் சந்தித்தது. நிஃப்டி பொதுத்துறை, தனியார் வங்கிகள், பார்மா, மீடியா, ரியல் எஸ்டேட் பங்குகளும் கடுமையான சரிவைச் சந்தித்து வருகின்றன. நிஃப்டி உலோகப் பங்குகள் மட்டும் சற்றே உயர்ந்து வர்த்தகமாகின்றன.
கச்சா எண்ணெய் 0.88 சதவீதம் உயர்ந்து 96.84 டாலராக உள்ளது.
வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா குறைந்து 95.47 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தை சரிவு ஏன்?
மேற்காசியப் போர்ப் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு, ஐடி பங்குகள் சரிவு, வெளிநாட்டு பங்குகள் அதிக அளவில் வெளியேற்றம், இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகள் மீதான எதிர்பார்ப்பு உள்ளிட்ட காரணங்களால் பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்து வருகின்றன.
Summary
Stock Market: Sensex slumps 800 pts, Nifty below 23,300; IT stocks down
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

4-ம் நாளாக பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு! காரணம் என்ன?

3-ம் நாளாக சரிவில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிவு; ஆட்டோ, உலோகப் பங்குகள் உயர்வு

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிவு! ஐடி, பார்மா பங்குகள் உயர்வு!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு! ஐடி, ரியல் எஸ்டேட் பங்குகள் லாபம்!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP




