பங்குச்சந்தைகள் இன்று (ஜூலை 3) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகின்றன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
78,152.34 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 487.21 புள்ளிகள் உயர்ந்து 77,989.33 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 159.75
புள்ளிகள் உயர்ந்து 24,337 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.21 சதவீதம், ஸ்மால்கேப் குறியீடு 0.47 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகிறது.
நிஃப்டி 50 பங்குகளில் இன்று அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களின் பட்டியலில் ஹெச்சிஎல் டெக், டாடா ஸ்டீல், சன் பார்மா உள்ளன.
மறுபுறம், எஸ்பிஐ, எம்&எம், என்டிபிசி ஆகியவை இன்று சரிவைச் சந்தித்த நிறுவனங்களின் பட்டியலில் உள்ளன.
துறைவாரியாக நிஃப்டி தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் சரிந்தும் ஆட்டோ, உலோகம், ரியல் எஸ்டேட் குறியீடுகள் உள்ளிட்ட அனைத்தும் உயர்ந்தும் வர்த்தகமாகின்றன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.2 ஆக உள்ளது.
அமெரிக்க - ஈரான் அமைதி ஒப்பந்தம், கச்சா எண்ணெய் விலை சரிவால் பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.
Summary
Stock Market: Sensex rises 400 pts; Nifty around 24,350
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










