ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

உங்கள் ஆசி வேண்டும்! 61 வயதில் நடிகர் ஆமிர் கான் 3-வது திருமணம்!

நடிகர் ஆமிர் கான் 3-வது திருமணம் செய்துகொள்ளவிருப்பது பற்றி...

News image

ஆமிர் கான் - கௌரி ஸ்ப்ராட் - Instagram

Updated On :3 ஜூலை 2026, 10:49 am IST

பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கான் தனது புதிய காதலி கௌரி ஸ்ப்ராட் (47) என்பவரை ஜூலை 5 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற உள்ளது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் இதில் கலந்துகொள்கிறார்கள்.

கௌரி ஸ்ப்ராட், ஆமிர் கானின் நீண்ட கால தோழியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகனுடன் ஆமிர் கான்.

மகனுடன் ஆமிர் கான். - IANS

திருமணம் பற்றி ஆமிர் கான் இன்று செய்தியாளர்களுடன் பேசுகையில்,

"ஜூலை 5-ஆம் தேதி நான் திருமணம் செய்துகொள்ள இருக்கிறேன். எங்கள் இல்லத்திலேயே திருமணம் நடைபெறும். நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் இதில் கலந்துகொள்வார்கள். எங்களுடைய திருமணத்திற்கு உங்களுடைய அனைவரின் ஆசிர்வாதமும் வேண்டும். உங்கள் ஆசியுடன் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க விரும்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார். அவரது மகன் ஜுனைத் கானும் உடனிருந்தார்.

ஆமிர் கானின் 3-வது திருமணம்!

பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கான், தயாரிப்பாளர் ரீனா தத் என்பவரை 1986ல் திருமணம் செய்தார். 2002 வரை அவருடன் வாழ்ந்து பின்னர் விவாகரத்து பெற்றார்.

இவர்களுக்கு ஜுனைத் கான் என்ற மகனும் இரா கான் என்ற மகளும் உள்ளனர்.

பிறகு, 2005இல் கிரண் ராவை திருமணம் செய்தார் ஆமிர்கான். ஆனால் 2021இல் அவரையும் பிரிந்தார். இவர்களுக்கு ஆசாத் என்ற மகன் இருக்கிறார்.

இந்த நிலையில், 25 ஆண்டுகளாகப் பழகி வந்த தனது தோழியை மூன்றாவதாக மணக்கவிருக்கிறார் ஆமிர் கான். புதிய காதலி கௌரி ஸ்ப்ராட்டிற்கு ஒரு மகன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Summary

We seek everyone blessings and hope that we remain happy forever: Aamir Khan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.