பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

61 வயதில் தனது 3-ஆவது திருமண தேதியை உறுதிப்படுத்திய ஆமிர் கான்!

பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் மூன்றாவது திருமணம் குறித்து...

News image

கௌரி ஸ்பிராட் உடன் ஆமிர் கான். - படம்: இன்ஸ்டா / கௌரி ஸ்பிராட்.

Updated On :5 ஜூன் 2026, 1:12 pm IST

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் (61 வயது) தனது மறுமணம் குறித்த தகவல் உண்மையானதென்றும் அதன் தேதியையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

நடிகர் ஆமிர் கான் தனது புதிய காதலி கௌரி ஸ்ப்ராட்டை ( 47 வயது) கடந்த மார்ச் 2025ல் அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும், இருவரும் ஓராண்டாக ஒன்றாக வாழ்வதாக அப்போது தெரிவித்திருந்தார்.

ஆமிர் கான் முதல்முறையாக 1986-2002 வரை தயாரிப்பாளர் ரீனா டட்டுடன் திருமணம் செய்து வாழ்ந்தார். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இருவர் (ஜுனைத் கான், இரா கான்) இருக்கிறார்கள்.

பிறகு, 2005இல் கிரன் ராவை ஆமிர்கான் திருமணம் செய்தார். ஆனால், இவர்களும் 2021இல் பிரிந்தனர். ஆனாலும் இருவரும் அவர்களது குழந்தை ஆசாத்துக்காக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில், 25 ஆண்டுகளாகப் பழகிவந்த தனது தோழியை மூன்றாவதாக மணக்கவிருக்கிறார். இது குறித்து ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

தற்போது நான் அமெரிக்காவுக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். எனது திருமணம் குறித்த தகவல் உண்மையானதுதான். அது ஜூலை 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது என்றார்.

புதிய காதலி கௌரி ஸ்ப்ராட்டிற்கு ஒரு மகன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் பெங்களூரில் வெல்னஸ், பியூட்டி ஸ்பேஸ் தொழிலில் சுயமாக ஒரு கடையை நடத்தி வருகிறார்.

Summary

Aamir Khan confirms marriage to Gauri Spratt, couple set to tie the knot on July 5

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.