திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்தூத்துக்குடியில் காவல் மரணம்? காவல்துறை விளக்கம்!காரணம் கூறாமல் 3 மாதம் சிறை! தில்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்! காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை!தர்மேந்திர பிரதான் ராஜிநாமா வரை நாடாளுமன்றம் முடங்கும்! கார்கே திட்டவட்டம்50 ஆண்டுகள்! எம்ஜிஆருக்குப் பிறகு திரையரங்குகளில் ஹீரோவாக முதல்வர் விஜய்!தீவிரமடையும் போராட்டம்! மெரீனா மூடல்; மக்களுக்கு தடை!நீட் தேர்வை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக தனியாகப் போராட்டம்! நாடாளுமன்றத்தில் இந்தியா - பாஜக கூட்டணிகள் எதிரெதிரே போராட்டம்!தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர் கோரிக்கை நியாயமனது! - ராகுல் காந்திவிஜய் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை! அமைச்சர் வினோத்நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடி
/

4-ம் நாளாக பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு! காரணம் என்ன?

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...

News image

கோப்புப் படம் - ANI

Updated On :23 ஜூலை 2026, 4:35 pm IST

இந்த வாரத்தில் தொடர்ந்து 4 ஆவது நாளாக இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ், நிஃப்டி50 குறியீடுகள் சரிவுடன் நிறைவு பெற்றுள்ளன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,515.10 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 363.66 புள்ளிகள் குறைந்து 76,391.39 புள்ளிகளில் நிலை பெற்றது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 126.65 புள்ளிகள் குறைந்து 23,869.60 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

நிஃப்டி50 குறியீட்டில் அதானி என்டர்பிரைசஸ், நெஸ்லே இந்தியா, ஸ்ரீராம் பைனான்ஸ் ஆகியவை அதிக சரிவைச் சந்தித்தன.

சென்செக்ஸ் 30 பங்குகளில் எட்டர்னல், ஹிந்துஸ்தான் யூனிலீவர், பஜாஜ் பின்சர்வ், சன் பார்மா, ஐடிசி, கோடக் வங்கி, டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், எம்&எம், டெக் மஹிந்திரா, பவர் கிரிட், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் லாபம் பெற்றன.

துறைசார் குறியீடுகளில், நிஃப்டி ஆட்டோ, மீடியா குறியீடுகள் மட்டும் உயர்ந்தன. ரியல் எஸ்டேட், உலோகம், எண்ணெய் & எரிவாயு பங்குகள் உள்ளிட்ட பிற குறியீடுகள் சரிவைச் சந்தித்தன.

மீண்டும் ஈரான் - அமெரிக்கா இடையேயான போரால் பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 98 டாலராக உயர்ந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 96.57 ஆக உள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம், எதிர்பாராத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்வு, வெளிநாட்டுப் பங்குகள் அதிகமாக வெளியேற்றம் ஆகிய காரணங்களால் பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதாக அதுசார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களால் நேற்று (புதன்) மட்டும் ரூ. 819.20 கோடி பங்குகள் விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Stock market today: Sensex slumps 394 pts; metal share decline for 2nd day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.