தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

அநீதிக்கு எதிராக முஸ்லிம்கள் குரலெழுப்ப வேண்டும்: ராகுல் காந்தி

சமூகம் தொடர்பான பிரச்னைகளில் வலுவாகக் குரலெழுப்ப காங்கிரஸ் கட்சியின் முஸ்லிம் தலைவர்களை ராகுல் காந்தி வலியுறுத்தியதாகத் தகவல்

News image

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 8:30 am IST

சமூகம் தொடர்பான பிரச்னைகளில் வலுவாகக் குரலெழுப்ப காங்கிரஸ் கட்சியின் முஸ்லிம் தலைவர்களை ராகுல் காந்தி வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைத் துறையின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். இந்தக் கூட்டத்தில், தங்கள் சமூகம் தொடர்பான பிரச்னைகளுக்கு எதிராக முஸ்லிம்கள் வலுவாகக் குரலெழுப்ப வேண்டும் என்றும், அவர்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தப் பாடுபடவும் கட்சியின் முஸ்லிம் தலைவர்களை ராகுல் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஒரு முஸ்லிமுக்கு அநீதி ஏதேனும் இழைக்கப்பட்டால், அவர் ஒரு சிறுபான்மையைச் சேர்ந்தவர் என்ற முறையில் குரலெழுப்பாமல், முஸ்லிம் என்ற முறையில் குரலெழுப்ப வேண்டும் என்று அவர் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த காங்கிரஸ் கட்சி ஒருபோதும் தயங்கக் கூடாது என்பதே ராகுல் காந்தி கூற முயல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Rahul Gandhi pushes Congress to use ‘Muslim’ term without hesitation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.