27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

திமுகவினர் விழிப்புடன் இருக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம் குறித்து...

News image

முதல்வர் ஸ்டாலின் - படம்: திமுக ஐடி விங்

Updated On :22 ஏப்ரல் 2026, 1:07 pm IST

திமுகவினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

”திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையவேண்டும் என உங்களில் ஒருவனான நான் நினைப்பதைவிடவும், அன்பு உடன்பிறப்புகளான நீங்கள் நினைப்பதைவிடவும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கொள்கைவழித் தோழமைக் கட்சிகள் எதிர்பார்ப்பதைவிடவும் தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

மக்கள் நம்முடன் இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் எதிரிகளுக்கும் அவர்களின் அடிமைகளுக்கும் இங்கே இடமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டங்கள் மட்டுமின்றி, அந்தக் கூட்டங்கள் நடக்கின்ற ஊரில் காலை நேர நடைப்பயணத்துடன் பொதுமக்களுடனான சந்திப்பு - கலந்துரையாடல், சாலை வலம் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்தால் தமிழ்நாட்டின் நீள அகலத்தின் பரப்புக்கு இணையாக உங்களில் ஒருவனான என்னுடைய பயணமும் அமைந்திருக்கிறது.

நம் அரசியல் எதிரிகள் பரப்புகின்ற அவதூறுகளைத் தமிழ்நாட்டு மக்கள் புறந்தள்ளி, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்திட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்ற உறுதியையும் மேற்கொண்டுள்ளனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வெளிப்பட்ட தொண்டர்களின் அயராத உழைப்பு, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23-ஆம் தேதியன்றும் விழிப்புடன் தொடர்ந்திட வேண்டும்.

அன்பு உடன்பிறப்புகளே.. நீங்கள் அயராது உழைத்ததை வெற்றிகரமாக அறுவடை செய்ய வேண்டிய நாளான ஏப்ரல் 23 அன்று, இத்தனை நாள்கள் கடுமையாகப் பணியாற்றியதைவிட, அதிக விழிப்புடன் இருந்து பணியாற்றிட வேண்டும். தேர்தல் களத்தில் தி.மு.க.காரனை மிஞ்சி உழைப்பதற்கு வேறெந்த கட்சியும் கிடையாது என்கிற பெருமை நமக்கு உண்டு. அதை 2026 சட்டமன்றத் தேர்தல் களத்திலும் முழுமையாக மெய்ப்பித்து, மகத்தான வெற்றிக்கு ஒவ்வொரு உடன்பிறப்பும் காரணமாக இருந்திட வேண்டும் என்பதே உங்களில் ஒருவனான என்னுடைய அன்புக் கட்டளை.

அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணி கண்காணிப்பகத்தின் (War Room) மூலமாக உங்களுக்குத் தொடர்ந்து தெரிவிக்கப்படும் தகவல்கள், வாக்குப்பதிவு நாளன்றும் தொடர்ந்திடும். திமுக சட்டத்துறை சார்பில் கண்காணிப்பகத்திலும், ஒவ்வொரு தொகுதியிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதால், வாக்குப்பதிவு நாளில் பணியாற்றும் பூத் ஏஜெண்ட்டுகள் உள்ளிட்ட திமுக உடன்பிறப்புகளுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள்.

2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர்வதற்கான திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்கான களம். தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்பதற்கான களம். தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் துரோகம் செய்பவர்களையும் அவர்களுக்குத் துணை போகிறவர்களையும் ஒருசேர வீழ்த்துகிற களம்.

வெற்றி நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே விழிப்புடன் பணியாற்றி வெல்வோம் ஒன்றாக!” என்று குறுப்பிட்டுள்ளார்.

Summary

திமுகவினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.