பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஜனநாயகக் கடமை ஆற்றத் தயாரா? சென்னையில் இரு நாள்களில் 9 லட்சம் பேர் பயணம்!

தமிழகத்தில் பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னையிலிருந்து மட்டும் சுமார் 9 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

Voters travel to their hometowns to cast their votes

வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு வாக்காளர்கள் பயணம்

Published On :

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னையிலிருந்து மட்டும் சுமார் 9 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்களிப்பதற்காக வாக்காளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் பணிபுரியும் லட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதையொட்டி, மாநகரின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

தேர்தலையொட்டி, சென்னையில் நாள்தோறும் வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,574 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. இதேபோல், தேர்தல் முடிந்து ஊர் திரும்புவதற்கும் சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து ஏப். 21, 22 ஆகிய தேதிகளில் மட்டும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளனர்.

மேலும், சென்னையிலிருந்து கன்னியாகுமரி, நெல்லை, கோவைக்கு செல்லும் வழக்கமான விரைவு ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களிலும்கூட இரு நாள்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, சென்னையிலிருந்து மதுரை, நெல்லை, கோவை, நாகர்கோயில் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.

Summary

TN Polls 2026: 9 Lakhs People Travel in Chennai Over Two Days!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.