திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு நாளை(ஏப். 26) சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருச்சி - தாம்பரம் ஒருவழி சிறப்பு விரைவு ரயில் (எண் : 06192) திருச்சி ரயில் நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை(ஏப். 26) இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலையில் தாம்பரத்தைச் சென்றடையும்.
திருச்சியில் இருந்து புறப்பட்டு தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம் வழியாக காலை 6.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும் இந்தச் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை(ஏப். 26) காலை 8 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
படுக்கை வசதி பெட்டிகள் 6, முன்பதிவில்லா பொதுப் பெட்டிகள் 12, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 2 ஆகியவற்றுடன் இந்த ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Summary
Special train, Train No. 06192 Tiruchchirappalli – Tambaram One Way Express Special on April 26
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை விடுமுறைக்கு செல்வோர் கவனத்துக்கு... சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விவரம்!

சென்னை - நெல்லை சிறப்பு ரயில் ஜூன் வரை நீட்டிப்பு!

சென்னையிலிருந்து நெல்லைக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

டிக்கெட் முன்பதிவு! ரயில்வேயின் புதிய மாற்றம்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

