எங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!திருவண்ணாமலை: கிரிவலம் செல்ல உகந்த நேரம்!ஒரே நாளில் தங்கம் விலை ரூ. 1,600 குறைந்தது!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப். 29) ஒரே நாளில் மொத்தம் ரூ. 1,600 குறைந்ததுஉத்தரப் பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து2025-ல் சமூக வலைதளங்கள் மூலம் ரூ. 1.89 லட்சம் கோடி மோசடி!உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டு
/

தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழ்நாட்டில் கனமழை பற்றி வானிலை ஆய்வு மையம்...

News image

கனமழை - file photo

Updated On :29 ஏப்ரல் 2026, 10:05 am

தமிழ்நாட்டில் ஏப்ரல் 30 முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுமார் 0.9 கிமீ உயரத்தில், வட உள் கர்நாடகா முதல் மன்னார் வளைக்குடா வரை, தென் உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

ஏப்ரல் 29 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோரப்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்ரல் 30, மே 1ல் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

மேல் 02ல் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை..

ஏப்ரல் 29 முதல் 03 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னையை பொருத்தவரை..

இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Summary

The Meteorological Department has stated that there is a possibility of heavy rainfall in Tamil Nadu starting from April 30.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.