மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

உதயநிதி ஸ்டாலின் கைது: திருவள்ளூர் சாலை மறியலில் திமுகவினர் கைது!

திருவள்ளூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் பற்றி..

road blockade in Tiruvallur

திருவள்ளூரில் சாலை மறியல் - video crop

Published On :

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் விடுதலை செய்யக்கோரியும் வலியுறுத்தி இன்று திருவள்ளூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

முன்னாள் துணை முதல்வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அண்மையில் தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். அப்போது முதல்வர் ஜோசப் விஜய் குறித்து உதயநிதி ஸ்டாலின் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உதயநிதி ஸ்டாலினை சென்னையில் போலீஸார் கைது செய்தனர். இதைக் கண்டித்து தமிழக முழுவதும் திமுகவினர் செவ்வாய்க்கிழமை காலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ். சந்திரன் தலைமை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ வி.ஜி. ராஜேந்திரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தமிழக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு வந்தனர். அதைத்தொடர்ந்து அதே சாலையில் காமராஜர் சிலை முன்பு சாலையில் அந்தந்த பகுதியில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதையடுத்து அந்த பகுதியில் நின்றிருந்தவர்களும் வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீஸார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர். மேலும், திமுகவினர் சிலரிடம் போலீஸார் சட்டையைப் பிடித்து அத்துமீறியதாகவும் கூறப்படுகிறது. அப்போது அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து தனியார் அரங்கத்தில் சிறை வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.