கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி! சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை

உதயநிதி தஞ்சை அழைத்துச் செல்லப்படும் நிலையில் சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை

சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை - பிரதிப் படம்

Published On :

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டு தஞ்சை அழைத்துச் செல்லப்படும் நிலையில், அங்குள்ள சில தனியார் பள்ளிகளுக்கு திடீரென விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காவிரி விவகாரம் குறித்து தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசியதாகத் தொடரப்பட்ட புகார்களில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டுள்ளார்.

நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை கைது செய்யப்பட்ட உதயநிதி, காவல் வாகனம் மூலம் தஞ்சை காவல்நிலையம் அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு பிறகு விடுதலை செய்யப்படுவார் என்று காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது விழுப்புரம் மாவட்டம் ஓலக்கூர் காவல்நிலையத்தில் உதயநிதிக்கு மதிய உணவு வழங்கப்பட்டு, தற்போது விழுப்புரத்திலிருந்து உதயநிதியுடன் காவல் வாகனம் தஞ்சை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

இதற்கிடையே, தஞ்சையில் உள்ள சில தனியார் பள்ளிகள் திடீரென விடுமுறை அறிவித்து, பள்ளி, மாணவ, மாணவிகளை அவர்களது பெற்றோர் வந்து அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியிருப்பதாக தொலைக்காட்சி ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Summary

Udhayanidhi being taken to Thanjavur! Holiday declared for private schools.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.