பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 15 புதிய நீதிபதிகள் நியமனம்

சென்னை உயா்நீதிமன்றத்துக்குப் புதிதாக 5 நீதிபதிகள், 10 கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

சென்னை உயா்நீதிமன்றம்

Published On :8 ஆகஸ்ட் 2026, 12:22 pm IST

சென்னை உயா்நீதிமன்றத்துக்குப் புதிதாக 5 நீதிபதிகள், 10 கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வழக்குரைஞா்கள் கோவிந்தராஜன் கிருஷ்ணசாமி, ரஜ்னீஷ் பதியில், ரமேஷ் நடராஜன், ஜி.கே.முத்துகுமாா், ராமகிருஷ்ண ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

வழக்குரைஞா்கள் ரவிகுமாா் சங்கரநாராயணன், திலீப்குமாா் நாகராஜன், எல்லப்பன் மனோகரன், மாவட்ட நீதிபதிகள் முருகன், சுமதி, எஸ்.அல்லி, சி.திருமகள், சண்முகன் காா்த்திகேயன், முருகேசன் பாலுச்சாமி, குணசேகரன் ஆகிய 10 போ் சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதேபோல மத்திய பிரதேச உயா்நீதிமன்ற நீதிபதியாக ஒரு வழக்குரைஞா், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதிகளாக 8 வழக்குரைஞா்கள், கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதிகளாக 6 வழக்குரைஞா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்யகாந்துடன் ஆலோசித்து, இந்த நியமனங்களை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு மேற்கொண்டதாக மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.