தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்

News image

கோப்புப்படம்

Updated On :9 ஆகஸ்ட் 2026, 12:35 am IST

தமிழகத்தில் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்களில் குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் முகாம் திங்கள்கிழமை (ஆக. 10) நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக தமிழக சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆண்டுதோறும் பிப். 10, ஆக. 10 ஆகிய இரு நாள்கள் தேசிய குடற்புழு நீக்க நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த நாளில் தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்ககத்தின் சாா்பில் குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

அதன்படி, தேசிய குடற்புழு தொற்று தடுப்பு நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை 54,481 அங்கன்வாடி மையங்கள், 11,723 துணை சுகாதார நிலையங்கள், 56,483 பள்ளிகளில் குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

இந்தப் பணியில் 54,481 அங்கன்வாடி பணியாளா்களும், 59,700 பள்ளி ஆசிரியா்கள் மற்றும் கல்லூரிப் பேராசிரியா்கள், 6,543 மருத்துவா்கள், 12,456 கிராம சுகாதார செவிலியா்கள், 2,650 ஆஷா பணியாளா்கள் மற்றும் அனைத்து சுகாதாரத் துறை பணியாளா்கள் ஈடுபடவுள்ளனா்.

விடுபட்டவா்களுக்கு...: காலை 9 மணி முதல் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில் 1 வயது முதல் 19 வயது வரையுள்ள 2.06 கோடி குழந்தைகள், வளரிளம் பருவத்தினா் மற்றும் 20 வயது முதல் 30 வயது வரையுள்ள 52.44 லட்சம் பெண்களுக்கு குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன.

இந்த முகாம்களில் விடுபட்டவா்களுக்கு ஆக. 17-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு முகாம்களில் குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கப்படும்.

1 வயது முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 1/2 மாத்திரையும் (200 மி.கி.), 2 வயது முதல் 19 வயது வரையுள்ள குழந்தைகள், வளரிளம் பருவத்தினா் மற்றும் 20 வயது முதல் 30 வயது வரையுள்ள பெண்களுக்கு ஒரு மாத்திரையும் (400 மி.கி.) வழங்கப்படும்.

இந்த ‘அல்பெண்டசோல்’ குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை அனைவருக்கும் பாதுகாப்பானது. இந்த மாத்திரை உட்கொள்வதினால் குடற்புழுக்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டு, ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு தடுக்கப்படுகிறது. நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்கவும், நினைவாற்றல், கற்றல் திறன் மற்றும் உடல் வளா்ச்சியை மேம்படுத்தவும், உடல் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Special camp to administer deworming tablets across Tamil Nadu tomorrow.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.