பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

மின்வாரிய இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியது!

மின்வாரிய இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியது குறித்து...

current

மின்வாரிய இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியது! - கோப்புப் படம்

Published On :

தமிழ்நாடு மின்வாரியத்தின் இணையதள சேவைகள் திங்கள்கிழமை(ஆக. 10) மாலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை முடங்கியிருந்த நிலையில், காலை 11.40 மணி முதல் செயல்பட தொடங்கியது!

தமிழகத்தில் மின்வாரிய இணையதளத்தின் மூலம்தான் புதிய மின்இணைப்பு, மின் இணைப்புபெயர் மாற்றம், வீதப்பட்டி மாற்றம், கட்டடப் பணிக்கான தற்காலிக மின்னிணைப்பு, விவசாய மின்இணைப்பு உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஆனால் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி மின்வாரிய இணையதளம் முடங்கி விடுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை (ஆக.10) மாலை 4 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 11.40 வரையிலும் இணையதள சேவைகள் முடங்கின.

இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்நிலையில், காலை 11.40.க்குப் பின் வழக்கம் போல செயல்படத் தொடங்கின. ஆனாலும் இடையிடையே சேவை முடங்கியது. பகல் 12.15.க்குப் பின் தொடர்ந்து வழக்கம்போல செயல்பட தொடங்கியது.

மின்வாரிய சேவைகள் முடங்காத வகையில், அதன் சர்வர் திறனை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மின்வாரிய இணையதளம் முடங்கியது குறித்து தினமணி இணையதளத்தில் செய்தி வெளியான சில நிமிடங்களில் முடங்கிய மின்வாரிய இணையதளம் வழக்கம் போல செயல்பட தொடங்கியது.

Summary

After being down from Monday evening (Aug. 10) until Tuesday morning, the Tamil Nadu Electricity Board's online services resumed operations at 11:40 AM.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.