புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

காவிரியில் கூடுதல் நீர் திறக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு!

காவிரியில் இருந்து நிலுவையில் உள்ள நீரையும் திறக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிய மனு...

Supreme Court

உச்ச நீதிமன்றம் - ANI

Published On :

காவிரியில் இருந்து நிலுவையில் உள்ள நீரையும் திறக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிய மனு ஒன்றை அளித்துள்ளது.

கடந்த ஆக. 11 ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில், காவிரியில் இருந்து தினமும் 1 டிஎம்சி வீதம் 15 நாள்களுக்கு நீர் திறக்க கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திலும் இந்த பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டு தினமும் 1 டிஎம்சி வீதம் (12,000 கன அடி வீதம்) 15 நாள்களுக்கு நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

எனினும் நிலுவையில் உள்ள நீர் மற்றும் மாதாந்திர அடிப்படையிலான நீர் என மொத்தம் 36.63 டிஎம்சி நீரைத் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிய மனு ஒன்றை அளித்துள்ளது.

ஏற்கனவே உள்ள பற்றாக்குறை நீரை கணக்கில் கொண்டும், தற்போது விகிதாச்சார அடிப்படையிலும் 21,413 கன அடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிட்டால் மொத்தம் 36.63 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற ஆக. 31 ஆம் தேதிக்குள் இந்த கூடுதல் நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இது உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Tamil Nadu government moves Supreme Court seeking release of additional water from the Cauvery

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.