இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

சென்னை ஐஐடி-யில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க திட்டம்: இயக்குநர் காமகோடி

சென்னை ஐஐடி-யில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுவது குறித்து...

சென்னை ஐஐடி - கோப்புப் படம்

Published On :

வரும் காலங்களில் சென்னை ஐஐடி-யில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.

வரும் காலங்களில் சென்னை ஐஐடி மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ், எம்டி பட்டங்கள் வழங்குவது குறித்து அதன் இயக்குநர் காமகோடி பேசியதாவது, "ஒரு நாட்டில் சொந்தமாக மருத்துவக் கருவிகளை வடிவமைக்க வேண்டுமென்றால், மருத்துவர்களும் பொறியாளர்களும் ஒரே கூரையின்கீழ் செயல்பட வேண்டும்.

பொறியாளர்களை மருத்துவர்களாக மாற்றுவதை விட, மருத்துவர்களுக்குப் பொறியியலில் பயிற்சி அளிப்பதே எளிதான அணுகுமுறையாக இருக்கும்.

எதிர்காலத்தில் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டிலுமே மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதே ஐஐடி-யின் நோக்கம். ஐஐடி கரக்பூர் ஏற்கெனவே சொந்தமாக மருத்துவமனை அமைத்து, எம்டி படிப்பையும் வழங்கி வருவதுபோல, சென்னை ஐஐடி-யும் மருத்துவமனையை ஏற்படுத்தி, முறையான அனுமதியுடன் எதிர்காலத்தில் எம்பிபிஎஸ், எம்டி படிப்புகளை வழங்கும். சென்னை ஐஐடி-யும் மருத்துவப் படிப்புகளை வழங்க விரும்புகிறது.

எந்தவொரு தொழில்நுட்ப நிறுவனமும் ஒரு மருத்துவக் கல்லூரியைத் தொடங்கினால்தான், மருத்துவச் சந்தையில் நம் நாடு நிலைத்திருக்க முடியும்.

இருப்பினும், ஒரு ஐஐடி-யால் எளிதாக மருத்துவக் கல்லூரியைத் திறந்துவிட முடியாது. அதற்கு  தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதலும் தேவை" என்று தெரிவித்தார்.

Summary

IIT Madras plans medical school, proposes MBBS and MD programmes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.