
சென்னை, செங்கல்பட்டு உள்பட 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.23) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.23) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூா், உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
திங்கள்கிழமை (ஆக.24) கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதர மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், அரியலூா், பெரம்பலூா், மயிலாடுதுறை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரியிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகத்தில் ஞாயிறு, திங்கள்கிழமை (ஆக.23,24), ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது
6 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை நகரத்தில் 100.76 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. திருச்சி - 100.58, மதுரை விமான நிலையம், தஞ்சாவூா் தலா 100.4, பாளையங்கோட்டை - 100.22, வேலூா் - 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
உள் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பையொட்டியும் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை பதிவு: தமிழகத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் சென்னை விஐடி பகுதியில் 60 மி.மீட்டா் மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப் பகுதிகள் புதன்கிழமை (ஆக.26) வரை, மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 65 கி.மீட்டா் வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





