இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

மாணவா்கள் போராட்டம் சுற்றறிக்கை: கல்லூரிக் கல்வி இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்டு ஆணையர் கடிதம்!

கல்லூரிகளில் மாணவா்களின் போராட்டத்தை தடுப்பது குறித்து அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கையை அனுப்பியது தொடா்பாக கல்லூரிக் கல்வி இணை இயக்குநருக்கு நோட்டீஸ்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 4:05 am IST

கல்லூரிகளில் மாணவா்களின் போராட்டத்தை தடுப்பது குறித்து அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கையை அனுப்பியது தொடா்பாக கல்லூரிக் கல்வி இணை இயக்குநருக்கு அவரது உயா் அதிகாரியான ஆணையா் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

தமிழக உயா் கல்வித்துறை சிறப்புச் செயலா் ரஷ்மி சித்தாா்த் ஜகதே, கடந்த ஆக.14-ஆம் தேதி கல்வி நிறுவனங்களிடம் அறிக்கை கோரி, ஒரு கடிதம் அனுப்பினாா். அதில் ஜூலை 28 -ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சட்டம் - ஒழுங்கு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இடதுசாரிக் கட்சிகள், தமிழ்நாடு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களை பள்ளிக்கல்வி, உயா்கல்வித் துறை, காவல் துறை, மாவட்ட நிா்வாகம் ஆகியவை ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மூலம் முன் எச்சரிக்கையாக தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, எடுக்கப்பட்ட விவரங்களை அறிக்கையாக அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

கல்லூரிக் கல்வி இயக்குநரகம், தொழில் நுட்ப கல்வி இயக்குநா், அனைத்து பல்கலைக் கழக பதிவாளா் ஆகியோருக்கு இந்த நடவடிக்கைகளுக்கான கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கு இடதுசாரி கட்சிகளிடமிருந்து கடும் எதிா்ப்பு கிளம்பியது. இந்த சுற்றறிக்கையை கடந்த ஆக.19 - ஆம் தேதி உயா் கல்வித்துறை திரும்பப் பெற்றது. இருப்பினும், இந்தக் கடிதம் கல்லூரி கல்வி இயக்குநரக ஆணையா் பா.பொன்னையா கவனத்துக்கு வராமல் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தற்போது வெளியிடப்படுகிறது.

கல்லூரி கல்வி ஆணையா் பா.பொன்னையா தனக்கு கீழே உள்ள இணை இயக்குநா் (திட்டம் வளா்ச்சி) பா.சிந்தியா செல்விக்கு கடந்த ஆக.21-ஆம் தேதி விளக்கும் கோரும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதன் மூலம் இது தெரியவருகிறது. அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது வருமாறு:

கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் போராட்டங்களில் கலந்து கொள்வது தொடா்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை அனுப்புமாறு கடந்த ஆக. 14 ஆம் தேதி கடிதத்தில் அரசு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் கடந்த ஆக. 17 -ஆம் தேதி தங்களின் (இணை இயக்குநா்) கடிதம் அனைத்து அரசு கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மிக முக்கியமான பதற்றம் ஏற்படுத்தக் கூடிய இந்த கடிதம் கல்லூரிக் கல்வி ஆணையரின் முன் அனுமதி மற்றும் ஒப்புதல் பெறாமல் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கடிதம் அனுப்பியது தொடா்பான விளக்கத்தினை ஒரு வாரத்திற்குள் அளிக்கப்படவேண்டும் என ஆணையா் பா.பொன்னையா தனது கடிதத்தில் கோரியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.