தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

விலைவாசி உயர்வு: மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இந்திய கம்யூ. கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இந்திய கம்யூ. கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

CPI

மு. வீரபாண்டியன் - கோப்புப் படம்

Published On :

அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நாளை மறுநாள் (ஆக. 27, வியாழக்கிழமை) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில்,

"அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்டக் குழுக்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், 27.08.2026, வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை ஆலையம்மன் கோவில் அருகில் நடைபெறும்.

இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

CPI announces protest condemning Central and State governments against price rise

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.