
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், ஊழியர்கள் முற்றுகைப் போராட்டம்!
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பற்றி...

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், ஊழியர்கள் முற்றுகைப் போராட்டம் - DIN
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் செவ்வாய்க்கிழமை காலை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
கடந்த 2 ஆண்டுகளாக ஓய்வு பெற்ற 400 -க்கும் மேற்பட்ட பேராசிரியர், ஊழியர்களுக்கு, ஓய்வூதியம் மற்றும் தொகுப்பு ஊழியர்கள் மற்றும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம், பேராசிரியர், ஊழியர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தவறிய பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் அறிவுடை நம்பி, பதிவாளர் சிங்காரவேல் ஆகியோர் பதவி விலக கோரி பேராசிரியர்கள், ஊழியர்கள் நேற்று காலை 5 -வது நாளாக பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூட்டு நடவடிக்கை குழு இணை ஒருங்கிணைப்பாளர் ரவி, முன்னாள் ஊழியர் சங்க தலைவர்கள் மதியழகன், மனோகரன், பேராசிரியர் முத்து வேலாயுதம் உள்ளிட்ட பலர் போராட்டத்தை விளக்கி பேசினார்கள்.
நூற்றுக்கணக்கான பேராசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள், தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Summary
Professors and staff stage a siege protest at Annamalai Universit
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






