
கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக் கொலை: கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த உதயநிதி!
கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்துள்ளது பற்றி...
உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்
கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஆக. 25) கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதியில் மான் வேட்டையாடியதாக குற்றச்சாட்டி, அப்பகுதியைச் சேர்ந்த 3 தமிழர்களை கர்நாடக வனத்துறையினர் கொடூரமான முறையில் சுட்டுக்கொலை செய்தனர்.
இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்த உதயநிதி பேசியதாவது:
இறந்த தமிழர்களின் உடற்கூராய்வு விவரங்கள் வெளியே வந்துள்ளது. அதில் கொடூரமாக, சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து உயர்நிலை நீதி விசாரணை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக அந்த மாநில முதல்வரிடமிருந்து ஏதேனும் தகவல் பெறப்பட்டுள்ளதா?
மூன்று தமிழர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அவருடைய குடும்பத்துடன் துணை நிற்க வேண்டும்.
அந்தக் குடும்பங்களுக்கு போதுமான நிதி உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.
Summary
Leader of Opposition Udhayanidhi Stalin on Tuesday (25 Aug) brought a resolution to draw attention to the issue of Tamils being shot dead in Karnataka.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







