FOLLOW US

ON GOOGLE DISCOVER

உள் மாவட்டங்களில் இன்று முதல் வெப்பம் சற்று அதிகரிக்கும்இந்திய - நேபாள பயணிகள் பேருந்து சேவை: இன்றும் நாளையும் தற்காலிகமாக நிறுத்தம்சென்னையிலிருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 49 போ் மாயம்ஆவடியில் ஆண்டுதோறும் 150 பீரங்கி வாகனங்கள் சீரமைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங் தகவல்மின்சார வாகனங்களால் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்: நிதின் கட்கரி தகவல்அரசு அலுவலகங்களில் சோதனை: ரூ.1.18 கோடி ‘ஜிபே’ பரிவா்த்தனை கண்டுபிடிப்புஉக்ரைன் நகரங்களில் ரஷியா தீவிர தாக்குதல்: 2 போ் உயிரிழப்பு

விலைவாசி உயர்வு: கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் ஈடுபட்ட உதயநிதி, இபிஎஸ்

தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் ஈடுபட்டது குறித்து...

Udhayanidhi Stalin | Edappadi Palaniswami

சட்டப்பேரவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் | எடப்பாடி பழனிசாமி - சட்டப்பேரவை

Published On :28 ஆகஸ்ட் 2026, 9:54 am IST

தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் ஈடுபட்டனர்.

விலைவாசி உயர்வுக்கு எதிராக இன்றைய சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, "அத்தியாவசிய பொருள்களின் விலை நாளுக்குநாள் ஏறிக்கொண்டே இருக்கிறது. அரிசி, பருப்பு, சர்க்கரை என எந்தப் பொருளை எடுத்தாலும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. ஏழை, எளிய மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

தவெக அரசில் அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்த விலையேற்றத்தால் மக்கள் பாதிப்படைந்திருப்பதாகவும், மளிகைக் கடைகளுக்கே மக்கள் செல்வது குறைந்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன.

இந்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரேஷன் கடைகளில் தற்போது வழங்கப்பட்டு வரும் அரிசி, பருப்பு, சர்க்கரையின் அளவை இன்னும் கூடுதலாக வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும்.

மேலும், முதல்வரின் தலைமையில் நிதி, உணவு, கூட்டுறவு ஆகிய துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கும் ஒரு சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, விலைவாசி உயர்வுக்கு இந்த அரசு தீர்வுகாண வேண்டும்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, "அரிசி விலை கிலோவுக்கு ரூ. 20, சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ. 24 உயர்ந்துள்ளது. இதுதவிர பல்வேறு பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால், ஏழை எளிய மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் வறட்சி நிலவி வருகிறது. ஆந்திரத்திலும் வறட்சி நிலவுவதால், அங்கிருந்து கிடைக்கும் அரிசியின் வரவும் குறைந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்வைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததைப்போல, இந்த தவெக அரசும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதேனும் முயற்சி செய்கிறதா என அறிய விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.

Summary

LoP Udhayanidhi Stalin and ADMK Edappadi Palaniswami move a call-attention motion in the Assembly against the rise in prices

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.