FOLLOW US

ON GOOGLE DISCOVER

தேர்தல் வழக்குகள்! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனா மனுக்களுக்கு பதிலளிக்க திமுக வேட்பாளர்களுக்கு உத்தரவு!நேபாள வெள்ளம்! பலி எண்ணிக்கை 500-ஐ கடந்தது! மீட்புப் பணிகள் தீவிரம்!உள் மாவட்டங்களில் இன்று முதல் வெப்பம் சற்று அதிகரிக்கும்இந்திய - நேபாள பயணிகள் பேருந்து சேவை: இன்றும் நாளையும் தற்காலிகமாக நிறுத்தம்சென்னையிலிருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 49 போ் மாயம்ஆவடியில் ஆண்டுதோறும் 150 பீரங்கி வாகனங்கள் சீரமைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங் தகவல்மின்சார வாகனங்களால் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்: நிதின் கட்கரி தகவல்அரசு அலுவலகங்களில் சோதனை: ரூ.1.18 கோடி ‘ஜிபே’ பரிவா்த்தனை கண்டுபிடிப்புஉக்ரைன் நகரங்களில் ரஷியா தீவிர தாக்குதல்: 2 போ் உயிரிழப்பு

திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக்கோரி முதல்வர் விஜய் மனு தாக்கல் செய்தது குறித்து...

CM Vijay

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 11:23 am IST

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல்வர் விஜய் மனு தாக்கல் செய்துள்ளார்.

திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடையை நீக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல்வர் விஜய் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது, "5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, 6 மாதங்களுக்குள் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும்.

தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டதால், இந்தத் தொகுதிகளில் எம்எல்ஏ-க்கள் இல்லாமல் தொகுதி மக்கள் பாதிக்கப்படைந்துள்ளனர். ஆகையால், இந்த 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்.

இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்ற உள்நோக்கத்துடனேயே வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, இடைத்தேர்தலுக்கு தடைகோரி வெங்கடாஜலபதி தாக்கல் செய்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த 2 தொகுதிகளிலுமே அவர் வெற்றி பெற்றதையடுத்து, திருச்சி கிழக்கில் அவர் ராஜிநாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து, கரூர் எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோரும் ராஜிநாமா செய்தனர்.

இதனிடையே, இவர்களின் தேர்தல் வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தலை அறிவிக்கத் தடை விதிக்கப்பட வேண்டும் என பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து, இந்த 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

Summary

CM Vijay files a petition seeking to lift the stay on by-elections in five constituencies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.