ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

ஒரகடம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: 3 இளைஞர்கள் பலி

ஒரகடம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து பற்றி....

Two-wheeler head-on collision near Oragadam: 3 youths killed

ஒரகடம் காவல் நிலையம்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 10:54 am IST

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தர்ஷன் (21), வினிஷ் (21) மற்றும் மதுரையைச் சேர்ந்த துரைப்பாண்டியன் (25), கடலூரைச் சேர்ந்த யுவராஜ் (26) ஆகிய 4 பேரும் ஒரகடம் அருகே உள்ள வல்லக்கோட்டை பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி, அப்பகுதியில் உள்ள வெவ்வேறு தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் - சிங்கப்பெருமாள்கோவில் நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் தர்ஷன் மற்றும் வினிஷ் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் ஒரகடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர் திசையில் இருசக்கர வாகத்தில் துரைப்பாண்டியன் மற்றும் யுவராஜ் ஆகியோர் வந்துள்ளனர். எதிர்பாராதவிதமாக இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் இருசக்கர வாகனங்களில் பயணித்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரைப்பாண்டி, யுவராஜ் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பலியாகினர். அதேபோல செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தர்ஷனும் சிகிச்சை பலனின்றி பலியானார். உயிருக்கு ஆபத்தான நிலையில் வினிஷ் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ஒரகடம் போலீஸார், பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி கூராய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

Two-wheelers collide head-on near Oragadam in Kanchipuram district; 3 youths killed in tragic accident.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.