2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

விஜய்யை புகழ்ந்து முருகன் பாடல்! மன்னிப்பு கோரினார் பாடகர் வேல்முருகன்!

முருகன் பாடலை திரித்து பாடியதற்கு வேல்முருகன் மன்னிப்புக் கோரியது பற்றி...

மன்னிப்பு கோரினார் பாடகர் வேல்முருகன்

Published On :

தவெக ஆண்டு விழாவில் முருகன் பாடலை திரித்து விஜய்யை புகழ்ந்து பாடியதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், பாடகர் வேல்முருகன் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ஆம் ஆண்டு தொடக்க விழா கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அப்போது “மருதமலை மாமணியே முருகையா” என்ற முருகன் பாடலை திரித்து விஜய்யின் பெயரைக் குறிப்பிட்டு பாடகர் வேல்முருகன் பாடினார். பாடல் முடிந்தவுடன் மேடை ஏறிய விஜய், வேல்முருகனுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில், முருகன் பாடலை அவமதித்து இழிவுப்படுத்தி பாடிய வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஹிந்து அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவருக்கு தூண்டுதலாக இருந்த தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது.

இதனிடையே, இந்த சம்பவத்துக்கு பாடகர் வேல்முருகன் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளார்.

“யதார்த்தமாகவே இப்பாடலை பாடினேன். யாருடைய மனதையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை. தவெக தலைவர் விஜய்க்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் பாடல் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். முருகனை அவமதிப்பது என்பது என்னை நானே கத்தியால் குத்திக் கொள்வதற்கு சமம்” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

Murugan song praising Vijay! Singer Velmurugan apologized!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.