சி.வி. சண்முகம் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!6 எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா: பேரவைத் தலைவர் நடவடிக்கை செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்!உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 குறைவுஜந்தர் மந்தரில் போராட முயன்ற சிஜேபினர் கைது!

சென்னை - ஜல்பைகுரி ரயில் தடம் புரண்டது!

சென்னை - ஜல்பைகுரி ரயில் தடம் புரண்டது பற்றி...

சென்னை - ஜல்பைகுரி ரயில் தடம் புரண்டது - Photo: X

Published On :

சென்னையில் இருந்து ஜல்பைகுரி நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்தை நோக்கி புதன்கிழமை காலை அதிவிரைவு ரயில் (எண் 22611) புறப்பட்டுச் சென்றது.

இந்த ரயில் இன்று காலை 8.51 மணியளவில் ஒடிஸா மாநிலத்தின் ஜாகபுரா ரயில் நிலையத்தை கடந்து செல்லும்போது, தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது.

ரயிலின் ஒரு குளிர்சாதன பெட்டியும், இரண்டு முன்பதிவில்லா பெட்டியும் தண்டவாளத்தைவிட்டு விலகியதால் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது.

ரயிலில் பயணித்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே ஊழியர்கள், தண்டவாளத்தைவிட்டு விலகிய ரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், அவ்வழியாகச் செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.

Summary

Chennai - New Jalpaiguri SF train derailed!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.