சர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

சென்னையில் செஷல்ஸ் அதிபர்! முதல் இந்திய பயணம்!

செஷல்ஸ் அதிபரின் இந்திய பயணம் பற்றி...

News image

சென்னையில் செஷல்ஸ் அதிபர்

Photo: MEA

Updated On :5 பிப்ரவரி 2026, 4:55 am

இணையதளச் செய்திப் பிரிவு

செஷல்ஸ் நாட்டின் அதிபராக கடந்தாண்டு பதவியேற்ற பேட்ரிக் ஹொ்மினி, முதல்முறையாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்துக்கு வருகைதந்த அவரை தமிழக அமைச்சர் மதிவேந்தன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர்.

இந்தியாவுக்கு 7 நாள்கள் பயணமாக வந்துள்ள பேட்ரிக் ஹெர்மினி, தில்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்துப் பேசவுள்ளார்.

தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் சர்வதேச பிரச்னைகள், இருநாட்டு உறவுகள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஹெர்மினியை வரவேற்று வெளியுறவுத் துறை அமைச்சகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நீண்டகால மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியா - செஷல்ஸ் இருதரப்பு உறவுகளின் 50 ஆண்டுகளை நினைவுகூர்கிறோம்.

இந்தியாவுக்கான தனது முதல் அரசுமுறைப் பயணமாக சென்னைக்கு வருகை தந்துள்ள செஷல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினியை அன்புடன் வரவேற்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.

முன்னதாக, செஷல்ஸில் நடைபெற்ற பேட்ரிக் ஹொ்மினியின் பதவியேற்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.