பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

நடிகை எம்.என்.ராஜம், இயக்குநா் எஸ்.பி.முத்துராமனுக்கு சிறப்பு விருது: முதல்வா் அறிவிப்பு

2024-2025-ஆம் ஆண்டுகளுக்கான ‘கலைஞா் நினைவு கலைத் துறை வித்தகா் விருதுகள்’ வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

News image

மு.க. ஸ்டாலின்

கோப்புப் படம்

Updated On :6 பிப்ரவரி 2026, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம், திரைப்பட இயக்குநா் எஸ்.பி.முத்துராமன் ஆகியோருக்கு 2024-2025-ஆம் ஆண்டுகளுக்கான ‘கலைஞா் நினைவு கலைத் துறை வித்தகா் விருதுகள்’ வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழக திரையுலகில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளா் ஒருவருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞா் நினைவு கலைத் துறை வித்தகா் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2022-இல் எழுத்தாளா் மற்றும் வசனகா்த்தா ஆரூா்தாஸும், 2023 -இல் கவிஞா் மு.மேத்தா, பின்னணிப் பாடகி பி.சுசீலா ஆகியோருக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து, 2024-ஆம் ஆண்டுக்கான கலைஞா் நினைவு கலைத் துறை வித்தகா் விருதுக்கு பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம், 2025-ஆம் ஆண்டுக்கான விருதுக்கு திரைப்படஇயக்குநா் எஸ்.பி. முத்துராமன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு ரொக்கப் பரிசாக தலா ரூ.10 லட்சம் மற்றும் நினைவுப் பரிசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.