கமல்ஹாசனின் பேச்சால் தமிழ்நாடு தலைகுனிந்து நிற்கிறது என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை வடசென்னைக்கு உட்பட்ட ராயபுரம் பகுதியில் உள்ள சிறு குறு வியாபாரிகளிடம் கோரிக்கைகளை கேட்கும் பணியில் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டனர்.
அவர்களிடம் அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், கமல்ஹாசன் கட்சி தொடங்கிய உடனேயே நான் ஒன்றை குறிப்பிட்டேன். அவர் பேசும் மொழிக்கு கோனார் உரைதான் தேவைப்படும் என்று தெரிவித்தேன்.
அவர் நாடாளுமன்றத்தில் என்ன பேசினார். எந்த மொழியில் பேசினார் என்பதே விளங்கவில்லை. அதே நேரத்தில் பெரியார் சொல்லியதைதான் நிர்மலா சீதாராமன் சொன்னார். ஆனால் அதைக் கூட தெரியாமல் கமல்ஹாசன் தமிழ் பிச்சை வாங்கும் மொழி இல்லை என்று பெரியாருக்கு தான் பதில் சொல்லியுள்ளார். அதைக் கூட தெரியாத இங்குள்ள பெரியார் பக்தர்கள் கைதட்டி சூப்பர் என்று ரசிக்கிறார்கள்.
அதேபோல யாரும் ஆட்சி அதிகாரத்தில் அதிக நாட்கள் இருக்க முடியாது என கமல்ஹாசன் கூறுகிறார். யாரை கூறுகிறார், 2026 சட்டபேரவைத் தேர்தல் இங்குதான் நடைபெற உள்ளது. திமுக மன்னிக்க முடியாத பல தவறுகளை செய்வார்கள். அதிலும் கமலஹாசனை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியது.
திமுக செய்த மிகப்பெரிய தவறு சினிமாவில் டயலாக் பேசிக் கொண்டு இருந்தவர் தற்பொழுது நாடாளுமன்றத்தில் என்னவென்றே தெரியாமல் தவறாக டயலாக்குகளை பேசிக்கொண்டிருக்கிறார். இதனால் தமிழ்நாடு தலைகுனிந்து கொண்டிருக்கிறது என்றார்.
Summary
Former BJP state president Tamilisai Soundararajan has said that Tamil Nadu is bowing its head due to Kamal Haasan's speech.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோயில் நிலங்கள் சூறையாடப்படுவது வேதனை அளிக்கிறது: தமிழிசை சௌந்தரராஜன்

ஆளுநரின் அமைதியான உரை! தமிழிசை சௌந்தரராஜன் | BJP | TVK | DMK

மேக்கேதாட்டு விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம்: தமிழிசை சௌந்தரராஜன்

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke




