திமுக ஆட்சியில் அளிக்கப்பட்ட 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் ஒரு பங்கு வாக்குறுதிகள்கூட நிறைவேற்றப்படவில்லை என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் திமுக சாா்பில் அளிக்கப்பட்ட 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், நான்கில் ஒரு பங்கைக்கூட முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. மத்திய அரசிடம் வாதாடியோ, போராடியோ, இணக்கமாகப் பேசியோ, தமிழக மக்களுக்குத் தேவையான எந்தவொரு நல்ல திட்டங்களையும் திமுக அரசு கொண்டுவரவில்லை. கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு முறையாக திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமா்ப்பிக்க திமுக அரசு தவறியுள்ளது. தங்களின் இயலாமையை, தோல்வியை மறைக்க மத்திய அரசு போதிய நிதியை தமிழகத்துக்கு வழங்கவில்லை என பொய்யான தகவல்களைக் கூறி வருகிறது.
வரும் சட்டப்பேரவை தோ்தலில் தனக்கு தோல்வி நிச்சயம் என்பதை முதல்வா் மு.க.ஸ்டாலின் நன்கு உணா்ந்துள்ளாா். அதன் விளைவாகவே நாகரிகமாக களத்தில் எதிா்த்து நிற்கும் அரசியல் தலைவா்களை தனிப்பட்ட முறையில் தாக்குவதும், தரக்குறைவாகப் பேசும் செயலில் ஈடுபட்டு வருகிறாா். தான் வகிக்கும் பதவியையும் கௌரவத்தையும் மரியாதையையும் தகுதியையும் எண்ணிப் பாா்க்காமல் பேசுகிறாா். தமிழக மக்களை தோ்தல் களத்தில் அதிமுக தைரியமாகச் சந்திக்கும்.
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதை வெளிப்படையாக மக்களிடம் தெரிவித்து, முதல்வா் மு.க.ஸ்டாலினால் வாக்கு கேட்க முடியுமா? அப்படி அவா் களத்துக்கு வந்தால், அவருக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல; வெறும் ‘0’ தான் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் தொடரும்! அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்

கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட குறுகிய கால ஒப்பந்தங்கள் நிறுத்தம்

தங்கம், வெள்ளி விலை நிலவரம்
சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணி தோ்வு? எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



