இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

வரும் தேர்தலில் நிச்சயமாக அதிமுக வெற்றி பெறாது: தவெகவில் இணைந்த முன்னாள் நிர்வாகி!

வரும் தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறாது என்று அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வி.எஸ்.பாபு தெரிவித்துள்ளார்.

தவெகவில் இணைந்த வி.எஸ்.பாபு.

Published On :7 பிப்ரவரி 2026, 7:16 pm IST

வரும் தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறாது என்று அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வி.எஸ்.பாபு தெரிவித்துள்ளார்.

வட சென்னையின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் எம்எல்ஏவுமான வி.எஸ்.பாபு தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அதிமுகவின் வடசென்னை வடக்கு(மேற்கு) மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வந்த இவர் அண்மையில் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தின் வருங்கால முதல்வர் விஜய்யை சந்தித்தது, உள்ளம் மகிழ்ந்து விட்டேன். சிறப்பான மனிதரை இன்று சந்திப்பேன் என்று நினைக்கவே இல்லை. அவரைச் சந்தித்ததில் நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன். நான் மட்டுமல்ல என்னுடன் வந்தவர்களும் விஜய்யை சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினோம்.

நாட்டில் என்ன நடக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். நல்ல ஆட்சி இல்லை. எதிர்க்கட்சியும் நல்ல எதிர்க்கட்சி இல்லை. அதன் செயல்பாடுகள் பிடிக்காத காரணத்தினால், வருங்காலத்தை மீட்டெடுக்க, ஆட்சியை செம்மையாக நடத்திச் செல்ல, அருமையான தலைவரை தமிழ்நாடு தேர்ந்தெடுத்திருக்கிறது. அதற்கு துணையாக வடசென்னையில் என்னுடைய உழைப்பும் இருக்க வேண்டும் என்று தவெகவில் இணைந்து உள்ளேன்.

வரும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைவர் விஜய் முடிவெடுப்பார். அதிமுகவில் விருப்பமனு கொடுத்தேன், ஆனால் நேர்காணலில் கலந்து கொள்ளவில்லை. அவர்களின் செயல்பாடுகள் எனக்கு பிடிக்கவில்லை. அதிமுக வளர்ச்சி அடைவதற்கான காரணமும் இல்லை. அவர்களால் கட்சியை நடத்து முடியவில்லை. நான் செய்யும் செயலுக்கு அவர்கள் ஒத்துவரவில்லை.

அதனால் விலகி விட்டேன். வலுவான கூட்டணி என்று மக்கள் சொல்ல வேண்டும். என்னை கட்சியில் இருந்து இன்னும் நீக்கவில்லை. அதிமுகவை வழிநடத்தும் திறன் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை. அவரின் செயல்பாடுகள் சரியில்லை. வரும் தேர்தலில் அதிமுக நிச்சயமாக வெற்றி பெறாது. அதிமுகவின் 160 நிர்வாகிகள் வந்துள்ளனர். இவ்வாறு குறிப்பிட்டார்.

Summary

Former AIADMK district secretary V.S. Babu has said that the party will definitely not win the upcoming elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.