ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் இல்லத் திருமண நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (பிப். 8) பங்கேற்றார்.
திருமணத்திற்கு வருகைப் புரிந்த விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து ஜெகன் மோகன் ரெட்டி வரவேற்றார்.
ஆந்திர முன்னாள் முதல்வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினரான சுனில் ரெட்டியின் இல்லத் திருமண நிகழ்வு சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (பிப். 8) நடைபெற்றது.
இதில், திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நடிகர் சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்கள் சாஹில் - வேதிகா தம்பதியை வாழ்த்தினர்.
இந்த நிகழ்வில், தவெக தலைவரும் நடிகருமான விஜய்யும் கலந்துகொண்டார். வெள்ளைச் சட்டையுடன் பங்கேற்ற விஜய்யை, ஜெகன் மோகன் ரெட்டி பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றார்.

விஜய்யை வரவேற்ற ஜெகன் மோகன் ரெட்டி - படம் - எக்ஸ்
பின்னர் இருவரும் அருகருகே அமர்ந்துகொண்டு பேசினர். இதில் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை எனக் கூறப்படுகிறது. நட்பு ரீதியாக பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டதாகத் தெரிகிறது.
திருமண நிகழ்வில் விஜய் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகின்றன.
Summary
TVK vijay AP former CM jagan mohan reddy meets in marriage
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை: வைகோ

தூய அரசியல் என்று சொல்லிவிட்டு அழுக்கு அரசியல் செய்கிறார் விஜய்! மு.க. ஸ்டாலின்

பாமக தலைவர் அன்புமணியை சந்தித்த முதல்வர் விஜய் | Vijay | TVK | Anbumani | Dinamani

தமிழக முதல்வரானார் சி. ஜோசப் விஜய்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



