எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

என்ன, சென்னை விமான நிலையத்தில் ரூ.10-க்கு டீ கிடைக்குமா? எங்கே?

சென்னை விமான நிலையத்தில் ரூ.10-க்கு டீ கிடைப்பது பற்றி..

News image

உதான் யாத்ரீ கஃபே - x -page

Updated On :10 பிப்ரவரி 2026, 3:23 pm IST

பொதுவாக விமானப் பயணம் என்றால் பலருக்கும் ஆச்சரியத்துக்கு உரியதாக இருக்கும். ஆனால், அங்கு விற்பனையாகும் உணவுப் பொருள்களின் விலையோ அதிர்ச்சிக்குள்ளாக்கும்.

சென்னை விமான நிலையம் சென்று விமானத்தில் பயணிப்பவர்களாக இருக்கட்டும், இல்லை, வழியனுப்பச் சென்றவர்களாக இருக்கட்டும். அங்கே இருக்கும் கடைகளில் ஒரு டீ வாங்கிக் குடிக்கக்கூட தயங்குவார்கள். காரணம், அதன் விலைப் பட்டியல்தான்.

பலரும் இந்த அதிகபட்ச விலை காரணமாக, விமானத்தில் செல்வதற்கு முன்பே உணவருந்திவிட்டு செல்வார்கள். சிலர் பையில் எளிமையான உணவை வைத்துக் கொள்வார்கள்.

ஆனால், தற்போது மத்திய அரசு திறந்திருக்கும் உதான் யாத்ரீ கஃபே, பலரது கவலையைப் போக்கியிருக்கிறது. சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் 1-ல் இந்த கடை அமைந்துள்ளது.

இங்கு ஒரு தண்ணீர பாட்டில் ரூ.10-க்கும், ஒரு காபி ரூ.20-க்கும் டீ ரூ.10க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோலவே, சமோசா, கச்சோரி போன்ற உணவுப்பொருள்கள் கூட சாதாரண கடைகளில் விற்பனையாகும் விலைக்கே கிடைக்கிறது.

எனவே, இனி, சென்னை விமான நிலையம் செல்வோர் உதான் யாத்ரீ கஃபே கடைக்குச் சென்று தேநீர், காபி குடிக்கலாம் கவலையில்லாமல். இந்த கடைகள் அடுத்தடுத்த பெரு நகரங்களின் விமான நிலையங்களிலும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

செலவைக் குறைக்க சில சின்ன யோசனைகள்

விமான நிலையம் செல்வதற்கு முன்பே உணவருந்திவிட்டுச் செல்வது நல்லது. விமான நிலையத்துக்கு வெளியே இருக்கும் உணவகங்களில் தரமான உணவு குறைந்த விலையிலும் கிடைக்கும்.

எப்போதும் கையில் குடிநீர் பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். விமான நிலையம் முழுக்க சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கிடைக்கிறது.

சிலர் பெரும்பாலும் வீட்டிலிருந்தே பாக்கெட் செய்து சான்ட்விச், பழங்கள், உலர் பழங்கள் போன்றவற்றை எடுத்து வந்துவிடுகிறார்கள். விமான நிலையத்தில் சாப்பிட உதவும்.

இல்லை, விமான நிலையம் வந்துவிட்டோம், சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்றால், விலைப் பட்டியலைப் பார்த்து நமக்குச் சரியான உணவகத்தைத் தேர்வ செய்து சாப்பிடலாம்.

Summary

About getting tea for Rs.10 at Chennai airport..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.